வடகொரியா முகக் கவசங்கள் அணிவதை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளது!

வடகொரியாவில் முகக்கவசங்களை அணிவது நிறைவுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா பெருந்துதொற்று காலப்பகுதியில் முகக்வசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஏராளமான நாடுகள் அந்த விதியை தளர்த்தியுள்ளன.
இருப்பினும் வடகொரியாவில் குறித்த விதி தொடர்ந்தும் அமுலில் இருந்தது. எல்லைகளை பூடி மக்கள் முகக்கவசம் அணியவேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அத்துடன் வடகொரியாவில் கொவிட் பற்றிய தரவுகள் வெளிவரவில்லை.
இந்நிலையில், அங்கு கொவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக தெரிகிறது என பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் இல்லாமல் இருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட முகமூடிகளை மீண்டும் பயன்படுத்துவதால். தோல் மற்றும் கண் நோய்தொற்றுக்கள் பரவுவதற்கு வழிவகுப்பதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



