மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!
இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் சீரற்ற வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதக்கவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.