இஸ்ரேலிய தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

#world_news
Mayoorikka
2 years ago
இஸ்ரேலிய தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

பாலஸ்தீன போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

மேற்குக் கரைப் பகுதியில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதுடன், பாலஸ்தீனப் போராளிகளும் பதிலடி கொடுத்துள்ளனர்.

 தொடர் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ஆயுதப் படைகளை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 தாக்குதலுக்கு உள்ளான அகதிகள் முகாம்களில் நீர் விநியோகம் மற்றும் மின்சார விநியோகம் சீர்குலைந்துள்ளதால் அங்கு வாழும் அகதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பலஸ்தீன சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவப் பொருட்கள் அந்தந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 ஜெனின் பகுதியில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், அகதிகள் முகாமை அழித்து அங்குள்ள மக்களின் வசிப்பிடங்களை பறிக்க இஸ்ரேல் முயற்சிப்பதாக பாலஸ்தீனம் குற்றம் சுமத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!