மின் கட்டண குறைப்பு : பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறையுமா?
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
மின்கட்டணம் குறைக்கப்பட்டாலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அச் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன, மின்கட்டணத்தில் 75 வீதமாவது குறைக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும்ம் தற்போது தங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோதும், பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், மின் கட்டணம் குறைக்கப்பட்டால் விலையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.