லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை வெளியாகியது!
#Litro Gas
Mayoorikka
2 years ago
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12 கிலோ 5 லீற்றர் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 2,982 ரூபாவாகும்.
5 கிலோ லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகை எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,198 ரூபாவாகும்.. 2 கிலோ 3.0 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலையை 37 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த வகை எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 561 ரூபாவாக குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.