ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் நாளை வழமைக்கு திரும்பும்
#SriLanka
#Bank
#Bank of Ceylon
#Commercial Bank
#Hatton National Bank
#Lanka4
Kanimoli
2 years ago
ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படும். உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று (03) வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் நாளை முதல் வழக்கம்போல் திறக்கப்படும், வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.