கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகள் மாற்றப்பட வேண்டியிருக்கும்: முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்

#SriLanka #Central Bank #economy
Prathees
2 years ago
கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகள் மாற்றப்பட வேண்டியிருக்கும்: முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் எதிர்காலத்தில் திருத்தப்பட வேண்டியிருக்கும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆட்சேபனைகளை கருத்திற் கொண்டு குறித்த பிரேரணையை மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார். 

 உள்ளுர் கடன் மறுசீரமைப்பை ஆரம்பிக்கும் போது வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட வேண்டுமென மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை, கிராமங்களுக்குச் சென்று தாம் மக்களுக்காக நிற்கிறோம் என அறிவிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து கட்டளைகளுக்கும் ஆதரவளிப்பதாக சமகி ஜனபலவேகய தெரிவித்துள்ளார். 

 கட்சியினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!