தவறான தரவுகளின் அடிப்படையில் தான் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன - ஜனக்க ரத்நாயக்க!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
தவறான தரவுகளின் அடிப்படையில் தான் மின் கட்டணங்கள்  உயர்த்தப்பட்டன - ஜனக்க ரத்நாயக்க!

தவறான தரவுகளின் அடிப்படையில் தான் மின் கட்டணங்கள்  உயர்த்தப்பட்டது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் மின் கட்டணங்கள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். 

மின் கட்டண உயர்வுக்காக இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த சில தரவுகள் பிழையானவை எனத் தெரிவித்த அவர், சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் தவறுகள் கண்டுப்பிடிக்கப்படும் எனவும் கூறினார். 

ஆகையால் தான் இலங்கை மின்சார சபை, முன்மொழிந்த 3 சதவீத குறைப்புக்கு   பதிலாக 14 சதவீத  மின் கட்டண குறைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!