தாய்லாந்தில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வரவுள்ள விருந்தினர்
#SriLanka
#Dehiwala
#National Zoo
Prathees
2 years ago
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு இன்று (03) பறவை இனமொன்று கொண்டுவரப்படவுள்ளது.
இந்த புதிய வகை பறவை தாய்லாந்தில் இருந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் 87வது வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆண்டு நிறைவையொட்டி, மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு பெயர் சூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
இன்று 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.