அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்த திட்டம்: விமல் வீரவங்ச தகவல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
மறுசீரமைக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன் தவணைகள் முடிவடையும் வரை செலுத்தப்படாது என்றும் அதுவரை நாட்டின் தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க 'நரகத்தில் இடைவெளி' போன்ற சிறு சலுகைகளை வழங்குவதாகத் தெரிகிறது. மின் கட்டணம் 60-70 சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது 14 சதவீதம் குறைக்கப்பட உள்ளது.
அந்த சலுகைகளை நம்பி யாரும் ஏமாந்து விடக்கூடாது. நான் கேள்விப்பட்டபடி ரணில் விக்கிரமசிங்க மார்ச் 2024 வாக்கில் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
அதுவரை மறுசீரமைக்கப்பட்ட வெளிநாட்டுக் கடனின் தவணையைச் செலுத்தப் போவதில்லை. எனவே, நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்து, நாட்டில் கிடைக்கும் சில டாலர்களைக் கொண்டு முன்னேற முடியும்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் வரை இவ்வாறான வியூகத்தை கடைப்பிடித்து வருவதால், 'இந்தக் குழியில் இருந்து மீள்வோம்' என்று நாம் யாரும் நினைக்க வேண்டாம்.
ரணிலின் மாயாஜாலத்தில் நாம் அனைவரும் ஏமாறாமல் அவருடைய பொருளாதார மாதிரியின் பிழையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.