கெர்சன் நகரில் ஷெல் தாக்குதல் நடத்திய ரஷ்யா : பலர் காயம்!
#world_news
#Russia
#Lanka4
Dhushanthini K
2 years ago

தெற்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கெர்சன் நகரத்தில் நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில், சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக பிராந்திய இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன். தெற்கு பிராந்தியத்தில் உள்ள ஒரு மருந்தகம் மற்றும் உணவகம் ஒன்றும் தீக்கிரையாக்கப்படுள்ளது. இதில் இருந்த 50 வயதுடைய நபர் காலில் அடிப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு உயரமான கட்டிடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



