ஆபத்தில் உள்ள Zaphorizhizhia அணுமின் நிலையம் :செலன்ஸ்கி எச்சரிக்கை!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை தகர்க்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அனுமின் நிலையத்தை பாதுகாக்க உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த அணுமின் நிலையத்தில் இருந்து திடீரென்று ரஷ்ய துருப்புகள் வெளியேற்றப்பட்ட நிலையில், அச்சம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அணுமின் நிலையம் தற்போது மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்றார்.
இதனிடையே, உக்ரைன் இராணுவ உளவுத்துறையின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், Zaphorizhizhia அணுமின் நிலையத்தை தகர்க்கும் முடிவுக்கு ரஷ்யா வந்துள்ளது எனவும், இதனால் அணு கதிர்வீச்சு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையம் தொடர்பில் சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தற்போது ஆபத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, இது ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒப்பானது என விமர்சித்துள்ளார்.



