டயானா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இளவரசர் ஹரி : சகோதரரை சந்திக்கவில்லை!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
டயானா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இளவரசர் ஹரி : சகோதரரை சந்திக்கவில்லை!

டயானா விருது வழங்கும் விழாவில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகிய இருவரும் கலந்துகொண்ட போதும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த விடயம் அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

டயானாவின் விருதுவழங்கும் நிகழ்வு மட்டுமல்லாமல் முன்னதாக அரச குடும்பத்தில் நடைபெற்ற இரு நிகழ்வுகளிலும் இளவரசர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சகோதரர்கள்  இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது நடைபெறவில்லை. 

இரு சகோதரர்களும் கடைசியாக மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் நேரில் சந்தித்தனர். ஹரி தனியாக கலந்துகொண்டபோது, மேகன் மார்க்லே அவர்களின் குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் உடன் கலிபோர்னியாவில் இருந்தார். 

முடிசூட்டு விழாவின் போது ஹரி மற்றும் வில்லியம் இடையே எந்த சந்திப்புக்களும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் இராணி இரண்டாம் எலிசபெத்  இறந்தபோது, இருவரும் துக்கத்தை பகிர்ந்துகொள்வதற்காக சந்தித்திருந்தனர். இதுவே அவர்கள் கடைசியாக சந்தித்துக்கொண்ட தருணமாக பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே அரச குடும்பம் பற்றிய சில சர்ச்சை கருத்துக்களை இளவரசர் ஹாரி தான் எழுதிய ஸ்பேர் என்ற புத்தகத்தில் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!