அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்

#America #people #world_news #GunShoot #Died
Mani
2 years ago
அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்காவின் மெரிலேண்ட் உள்ள பால்டிமோர் நகரில் உள்ள கிரெட்னா அவன்யூ பகுதியில் இன்று அதிகாலை பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், ஒரு நபர் துப்பாக்கி ஏந்தியபடி கேளிக்கை நிகழ்ச்சிக்குள் நுழைந்து அங்கிருந்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டின் விளைவாக, நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடிய நிலையில் அவரை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!