லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திருத்தப்படவுள்ளது
#SriLanka
#prices
#Litro Gas
#Lanka4
Kanimoli
2 years ago
லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது. கடந்த மாத திருத்தத்தின் போது எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டது.
அதன்படி தற்போது இதன் விலை 3,186 ரூபாவாக காட்டப்பட்டுள்ளது. 5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,281 ஆகவும், 2.3 கிலோ எடை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு விலை ரூ.598 ஆகவும் உள்ளது.