பொருளாதார சிக்கலை சமாளிக்க வெளிநாடு செல்லும் வைத்திய நிபுணர்கள்: கறுப்பு பட்டியலில் சேர்ப்பு
#SriLanka
#doctor
Mayoorikka
2 years ago
நூற்று எழுபது மயக்க மருந்து நிபுணர்கள் இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் பணிபுரியச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பயிற்சி பெற்று இலங்கைக்கு வந்த 323 விசேட வைத்தியர்களில் 160 பேர் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வெளிநாடுளுக்கு பணிக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மருத்துவர்களின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் செலவுகளைச் சமாளிக்க இந்த வைத்தியர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும் தெரியவருகிறது.