யாழ் போதனாவைத்தியசாலைக்கு விஜயம் செய்த மைத்திரி பிரசவித்த குழந்தையை பார்வையிட்டார்!

#SriLanka #Jaffna #Hospital #Maithripala Sirisena
Mayoorikka
2 years ago
யாழ் போதனாவைத்தியசாலைக்கு விஜயம் செய்த மைத்திரி  பிரசவித்த குழந்தையை பார்வையிட்டார்!

யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நேற்று காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

 மைத்திரிபால சிறிசேனவை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட அவர் நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார்.

 சுகாதார அமைச்சராக அவர் இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் அவர் பார்வையிட்டார்.

 இதன்போது காலையில் பிரசவித்த ஆண் குழந்தையொன்றுக்கு அவர் தனது ஆசீர்வாதங்களை வழங்கியிருந்தார். வைத்தியசாலையின் அருங்காட்சியத்தை பார்வையிட்ட மைத்திரிபால சிறிசேன, யாழ் மாவட்ட மருத்துவ துறையின் வரலாறு தொடர்பாக ஆர்வமாக கேட்டறிந்தார்.

 இவ்விஜயத்தின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.


images/content-image/2023/07/1688289155.jpg

images/content-image/2023/07/1688289146.jpg

images/content-image/2023/07/1688289133.jpg

images/content-image/2023/07/1688289119.jpg

images/content-image/2023/07/1688289108.jpg

images/content-image/2023/07/1688289093.jpg

images/content-image/2023/07/1688289082.jpg

images/content-image/2023/07/1688289072.jpg

images/content-image/2023/07/1688289063.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!