வலகம்பா மன்னனின் தங்க கிரீடத்தை தேடிய 6 நபர்கள் கைது

#SriLanka #Arrest #Police
Prathees
2 years ago
வலகம்பா மன்னனின் தங்க கிரீடத்தை தேடிய  6 நபர்கள் கைது

தம்புள்ளை, கப்புவத்த பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் புதையல் தோண்டிய 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 இந்த 6 பேரும் வலகம்பா மன்னனின் தங்க கிரீடம், ரத்தினம் இருப்பதாக கூறி இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 கறுப்புக் கோழியை பைரவருக்குப் பலியிட்டு கல் மூடியை அகற்றத் தயாரான வேளையிலேயே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பூஜாபிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான காணியிலேயே இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை ரஜமஹா விகாரைக்கு அருகாமையில் காணி அமைந்துள்ளது.

 இந்த புதையல் இடத்தை தோண்டுவதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்ததையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!