சென்னை-திருப்பதி இடையே 'வந்தே பாரத்' ரெயில்- விரைவில் இயக்க திட்டம்

#India #Tamil Nadu #Train #Breakingnews #Chennai #Vande Bharat train
Mani
2 years ago
சென்னை-திருப்பதி இடையே  'வந்தே பாரத்' ரெயில்- விரைவில் இயக்க திட்டம்

சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத் ரெயில்களைத் தொடர்ந்து புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில், மூன்று வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும். குறிப்பாக, இந்த ரெயில்கள் கோரக்பூரில் இருந்து லக்னோ, சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் ஜோத்பூரில் இருந்து சபர்மதி வரை ஆகிய மூன்று வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை - திருப்பதி இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சேவைக்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் தற்போது வரை கிடைக்கவில்லை.

எனினும், உடனடியாக அனுமதி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும், சென்னை-திருப்பதி வந்தே பாரத் ரெயிலுக்கான கால அட்டவணை, பயண நேரம், கட்டணம் போன்ற விவரங்களை அறிவிக்கப்படும் என ரெயில்வே தரப்பில் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!