ஊழியர் சேமலாப நிதியத்தில் மோசடி செய்யும் அரசாங்கம் : சுமந்திரன்

#SriLanka #M. A. Sumanthiran
Mayoorikka
2 years ago
ஊழியர் சேமலாப நிதியத்தில்  மோசடி செய்யும் அரசாங்கம் : சுமந்திரன்

தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் என சர்வதேசத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு மக்களை தவறாக வழிநடத்துவது முற்றிலும் தவறான விடயமாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில் 

அனைத்து வெளிநாட்டு முதலீடுகளையும் அம்பலப்படுத்தும் அரசாங்கம் ஏன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் குறித்த விடயங்களை அம்பலப்படுத்துவதில்லை? குறிப்பாக தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ள என ஆவர் கேள்வி எழுப்பியுள்ள்ளார்.

 அத்தோடு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை தமது இறுதி கால சேமிப்பாக கருதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையானது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

 இதனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் என சர்வதேசத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு மக்களை தவறாக வழிநடத்துவது மற்றிலும் தவறான விடயமாகும்” 

 அத்தோடு அரசாங்கத்தினால் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் திருடப்படுகின்றது  எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

காலங்காலமாக பல்வேறு முறைகளில் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.

 ஏனெனில் பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்ப முடியாத நிலையில் உள்ளனர் என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!