பிரான்ஸில் ஐந்தாவது நாளாக தொடரும் கலவரம் : 2400 பேர் கைது!

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள கலவரம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மார்சேயில் போராட்டகாரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிஸில் உள்ள காவல்துறையினர், பிளேஸ் டி லா கான்கார்டில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றியுள்ளனர். அத்துடன் நகரின் முக்கிய அடையாளமான Champs Elysees அவென்யூவில் பாதுகாப்பை அதிகரித்தனர்.
மேலும் பிரெஞ்சு தலைநகரில் அதிகாரிகள் ஆயுதங்களை பறிமுதல் செய்த பின்னர் 37 பேரை கைது செய்ததாக அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். இதன்படி இதுவரை 2400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக நஹெல் என்ற 17 வயதான இளைஞரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் தலையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



