கதிரியக்க பேரழிவை சமாளிக்க பயிற்சி எடுக்கும் உக்ரைன்!
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
கதிரியக்க பேரழிவை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து உகரைன் பயிற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி கதிரியக்க தாக்குதல் நடைபெற்றால், அவசர சேவைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் உக்ரைன் வீரர்கள் பயிற்சி செய்த வருகின்றனர்.
ரஷ்யா Zaporizhzhia அணுமின் நிலையத்தை தகர்க்கக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஆலையில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள சபோரிஜியா நகரில் இந்த வாரம் பயிற்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலையின் ஆறு மின் அலகுகளில் நான்கிற்கு வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களை ரஷ்யா நகர்த்தியதாகவும் Zaporizhzhia பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.