பாராளுமன்றத்தில் இருந்து நிதியமைச்சுக்கு பறந்த கடிதம்!
#SriLanka
#Parliament
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில் நிதி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பபட்டுள்ளது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர நிதி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட பிரேரணை திருத்தங்களுடன் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.