பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் போது ராஜபக்ச குலத்தார் இல்லை!
பாராளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, மயந்த திசாநாயக்க, ரோகினி கவிரத்ன மற்றும் மனோ கணேசன் ஆகியோர் எதிர்க்கட்சியில் இருந்து விலகியிருந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரும் கட்சியில் இருந்து விலகியிருந்தனர்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து, திருத்தப்பட்ட வடிவில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.