வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள் இன்று முதல் திருத்தியமைப்பு
#SriLanka
#Lanka4
#Foriegn
Kanimoli
2 years ago
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள், முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் என்பன இன்று (01) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 21,467 ரூபாவாகும். பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 4 ,483 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் 17,949 ரூபாவில் இருந்து 58,975 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.