இலங்கையில் மதுபானத்திற்கான விலை அதிகரிப்பு!

#Lanka4
Thamilini
2 years ago
இலங்கையில் மதுபானத்திற்கான விலை அதிகரிப்பு!

இலங்கையில் மதுபானத்தின் விலைகள் இன்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

கலால் வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்படி,  அனைத்து வகையான பீர் போத்தல்களின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 750 மில்லிலீற்றர் போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வழங்கிய உத்தரவின் பேரில் இந்த வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சிகரெட்டுக்களுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!