தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது - சிறப்பு அமர்வில் செஹான் கருத்து!

#Lanka4
Thamilini
2 years ago
தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது  - சிறப்பு அமர்வில் செஹான் கருத்து!

தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர்  செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்போது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்த விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். 

தொடர்ந்து தெரிவித்த அவர்,  கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எதிர் கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். , கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்டத்தில் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன எனக்  கூறினார். 

அத்துடன், சர்வதேச கடன்களை மறுசீரமைத்தால் மாத்திரம் பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வு காண முடியாது என்ற காரணத்தால்தான்தேசியகடன்களை மறுசீரமைக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.  

தேசிய கடன் மறுசீரமைக்கப்படுவதால் வங்கி கட்டமைப்புக்கும், வங்கிகளின் ஸ்திர நிலைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அத்துடன் ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!