முத்துராஜாவை அழைத்துச் செல்ல கட்டுநாயக்கவுக்கு வந்துள்ள விமானம்
#SriLanka
#Elephant
Prathees
2 years ago
தாய்லாந்தால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட முத்துராஜா யானையை மீட்பதற்காக ரஷ்ய "இல்லூஷன்" ரக சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் சரக்கு விமானம் வந்தடைந்துள்ளது.
முத்துராஜா யானை இன்று நள்ளிரவு 12 மணியளவில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
அதன்படி, முத்துராஜா யானையை ஏற்றிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்தின் பேங்காக் நோக்கி நாளை அதிகாலை 03.00 மணியளவில் புறப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.