ஒரு மாத காலமாக தொடரும் சூடான் மோதலில் பலர் அகதிகளாகியுள்ளனர்

சூடானில் தொடரும் இராணுவப்படைகளுக்கிடையேயான மோதலில் தொடரந்து மக்கள் இடம்பெயர்பு, கொல்லப்படுதல் என்பன காரணமாக பலர் அங்கு அகதிகளாக்கப்பட்டு வருவதாக ஐ.நா தெரிவிக்கிறது.
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் கடந்த இரண்டரை மாதங்களாக நடைபெற்று வரும் மோதல் காரணமாக, பொதுமக்கள் 26 போ் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் ஒருங்கிணைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புலம் பெயா்ந்தவா்களில் 5.6 லட்சம் போ் சா்வதேச அகதிகளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவா்கள், அண்டை நாடுகளான எகிப்து, சாட் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா். வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது.
தொடரும் இந்த மோதலில் 3000-5000 வரையானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



