85 வயதான பாட்டியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த பேரன்
கேகாலை ஹெட்டிமுல்ல, கவுடுகம பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பேரன் ஒருவரே தனது 85 வயதான பாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது 93 வயது கணவருடன் உயிரிழந்துள்ளார்.
தம்பதியரின் இரண்டாவது குழந்தையின் குழந்தையால் (பேரன்) பாட்டி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இவர் சில காலமாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாகவும்இ பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபரான பேரன் தாத்தா மற்றும் பாட்டி வசிக்கும் வீட்டிற்கு வாரத்திற்கு இருமுறை வந்து அவர்களிடம் உள்ள பணத்தை எடுத்துச் சென்று மது அருந்துவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
28ஆம் திகதி இரவு பேரன் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தாத்தா மற்றும் பாட்டி வசிக்கும் வீட்டிற்கு வந்து பாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
உறவினர்கள் அறிவித்ததையடுத்து பொலிசார் வந்து வீட்டின் பின்புறம் படுத்திருந்த பெண்ணை கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர், சந்தேகநபர் 28 வயதான ருஷான் ரவீந்திர ரணசிங்க, தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோயினால் அவதிப்படும் பாட்டியின் தவிப்பைக் கண்டு தாங்க முடியாமல் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.