தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்தது
#India
#Tamil Nadu
#Electricity Bill
#Breakingnews
#Chennai
Mani
1 year ago

தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி, மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், முன்பு அறிவித்தபடி, தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், மின் கட்டணம் யூனிட்டுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு, வீடுகள், விவசாயம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், கைத்தறி, விசைத்தறி போன்றவற்றுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



