மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல்கருகி பலி!

#India #Accident #Lanka4
Dhushanthini K
2 years ago
மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல்கருகி பலி!

மகாராஷ்டிரா விரைவு சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் இன்று (சனிக்கிழமை) தீபிடித்து எரிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

விசாரணையில் கிடைக்கப்பெற்றுள்ள முதற்கட்ட தகவல்களின்படி பேருந்தின் டயர் வெடித்து சாலையில் இருந்த கம்பத்தில் மோதியதாக கூறப்பட்டுள்ளது. 

இதில் பேருந்தில் பயணம் செய்த 33 பேரில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!