பிரான்ஸ் செல்லும் பயணிகளுக்கு பயண எச்சரிக்கை!
#France
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

பிரான்ஸில் 17 வயதான இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில். அங்கு ஊரடங்கு விதிக்கப்படலாம் எனவும், ஆகையால் பிரான்ஸ் செல்லும் பிரஜைகளுக்கு பயண இடையூறுகள் ஏற்படும் எனவும் பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், உள்ளூர் போக்குவரத்து வசதிகள் குறைக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலவரங்கள் நடக்கும் இடங்களை கணிக்க முடியாது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



