அரை சொகுசு பேருந்து உரிமத்தை இரத்து செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு!
மாகாணங்களுக்கு இடையிலான அரைசொகுசு பயணிகள் பேருந்து சேவைகளின் அனுமதிபத்திரங்களை இரத்துச் செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்கள் 28 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்தே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ரிட் மனுவை வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி விசாசரணைக்கு எடுத்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், இது சம்பந்தமான நோட்டீஸை தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC), அதன் தலைவர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட 33 பிரதிவாதிகளுக்கு அனுப்பியுள்ளது.
மேலும், இது தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வு காண முயற்சிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.