பொடி இட்லி இப்படி செய்து பாருங்க!

#Recipe #Cooking #How_to_make
Mani
10 months ago
பொடி இட்லி இப்படி செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் கொஞ்சம்

½ கப் கடலை பருப்பு

½ கப் உளுத்தம் பருப்பு

2 டேபிள் ஸ்பூன் தனியா

10 வர மிளகாய்

1 டேபிள் ஸ்பூன் சீரகம்

கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு

4 ஸ்பூன் பூண்டு

புளி கொஞ்சம் 

மஞ்சள் பொடி கொஞ்சம் 

உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, வரமிளகாய், சீரகம், கருவேப்பிலை, பூண்டு, புளி, சேர்த்து நன்கு வதக்கி பூண்டு,புளி, சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.

ஆறியதும் மிக்சியில் சேர்த்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து உங்கள் விருப்படி மினி இட்லி ஊற்றி வெந்ததும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

தாளிக்க அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு சேர்த்து அத்துடன் வேக தேவையான இட்லியை சேர்த்து கிளறி பரிமாறவும்.