போலந்துக்கு அனுப்புவதாக கூறி 130 இலட்சம் ருபாய் மோசடி செய்த பெண்ணொருவருக்கு விளக்கமறியல்

#SriLanka #Arrest #Prison
Prathees
2 years ago
போலந்துக்கு அனுப்புவதாக கூறி 130 இலட்சம் ருபாய் மோசடி செய்த பெண்ணொருவருக்கு விளக்கமறியல்

போலந்துக்கு அனுப்புவதாக கூறி 130 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக 53 முறைப்பாடுகளைப் பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

 சந்தேகநபர் கொழும்பு பத்தரமுல்லையில் வசிக்கும் 44 வயதுடைய பெண் ஆவார். போலந்துக்கு அனுப்பப்படும் என்று கூறியவர்களிடம் இருந்து பணம் மற்றும் அவர்களது கடவுச்சீட்டுகள் சட்டவிரோதமாக வாங்கி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 அவர் நடத்தி வந்த வேலைவாய்ப்பு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!