லொத்தர் விலை உயர்வால் லொத்தர் வாங்குவது குறைவடைகிறது
#SriLanka
#Lanka4
#Lottery
Kanimoli
2 years ago
லொத்தர் விலை உயர்வால் லொத்தர் வாங்குவது குறைவதாக லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லொத்தர் ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்தவுள்ளதாக லொத்தர் சபைகள் நேற்று (29) அறிவித்தன.
இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த அகில இலங்கை லொத்தர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கிரிஷான் மரம்பகே, இந்த தீர்மானத்தினால் லொத்தர் கைத்தொழில் பாழாகும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் 6ஆம் திகதி முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகுவதற்கு லொத்தர் விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளதாக கிரிஷான் மரம்பகே தெரிவித்துள்ளார்.
லொத்தர் விலை உயர்வை கண்டித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.