இந்தியா தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் சீன அதிபர் காணொளி மூலம் பங்கேற்றார்.

#India #PrimeMinister #China #world_news
Mani
2 years ago
இந்தியா தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் சீன அதிபர் காணொளி மூலம் பங்கேற்றார்.

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இந்தியா தற்போது பணியாற்றி வருகிறது. இந்தியாவின் தலைமையில், இந்த அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான மாநாடு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பாதுகாப்பு, வெளிவிவகாரம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் தீவிரமாக பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாடு வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்திய பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா அதிபராக பொறுப்பேற்ற பிறகு, சீன அதிபர் ஒருவர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் முதல்முறையாக பங்கேற்கிறார்.கடந்த 2020ம் ஆண்டு நடந்த கல்வான் மோதலுக்கு பின் இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!