யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசுபேருந்து தீ பிடித்து விபத்து!
#SriLanka
#Covid Vaccine
#Colombo
#Jaffna
#Accident
Mayoorikka
2 years ago
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் இயந்திரப்பகுதி அதிக சூடடைந்தமையே இந்த தீப்பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என மதுரங்குளி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
யாழ்பாணத்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான Eswaran express 87 என்ற அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


