ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது அரசாங்கம் தொடர்பில் கவலையடையும் சீனா!

#China #world_news #Russia
Mayoorikka
2 years ago
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது அரசாங்கம்  தொடர்பில் கவலையடையும் சீனா!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது அரசாங்கத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மை குறித்து சீன நிர்வாகத்தில் அச்சம் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 சர்வதேச ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் ரஷ்ய ஆட்சி குறித்து சீனா கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன. ரஷ்ய ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படையினர் நடத்திய கிளர்ச்சியே இதற்கான காரணம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 எவ்வாறாயினும், வாக்னரின் இராணுவத்தின் தோல்வியடைந்த கிளர்ச்சியின் பின்னரும், சீனாவும் ரஷ்யாவும் வலுவான நண்பர்களாக இருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 வாக்னர் கூலிப்படை கடந்த சனிக்கிழமை ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தபோது, ​​உலகின் பல நாடுகளைப் போலவே சீனாவும் மௌனக் கொள்கையைப் பின்பற்றி ரஷ்யாவின் நிலைமையை அவதானித்ததாக சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 பின்னர், பெலாரஸ் தலையிட்டு வாக்னரின் இராணுவத்தைத் திருப்பிய பிறகு, ரஷ்யாவை ஆதரிப்பதாகச் சொல்லி சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டது.. இதற்கிடையில், வாக்னர் கிளர்ச்சிக்குப் பிறகு, ரஷ்ய இராணுவத்தின் பல உயர்மட்ட அதிகாரிகள் ஜனாதிபதி விளாடிமிர் புடின் பங்கேற்கும் அரசாங்க கூட்டங்கள் மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 அவர்களில் சிலர் உக்ரைன் போரின் போது ரஷ்ய இராணுவத்தின் தலைமைத்துவத்திற்கும் இராணுவ தந்திரோபாயங்களை திட்டமிடுவதற்கும் வலுவான பங்களிப்பை வழங்கிய அதிகாரிகள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

 அத்துடன், வாக்னரின் கூலிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கலகம் குறித்து ரஷ்யாவில் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் அறிந்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!