மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் மாரடைப்பால் காலமானார்

#SriLanka #Death #Muslim #Lanka4
Kanimoli
2 years ago
மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் மாரடைப்பால் காலமானார்

ரஷாதி டிராவல்ஸ் என்ற இலங்கை ஹஜ் பயணக் குழுவுடன் இணைந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் அல்ஹாஜ் அப்துல் மஜீத் மொஹமட் மாரடைப்பால் காலமானார்.

 அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விடயத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது.

 அவர் குருநாகல், பனகமுவவை வசிப்பிடமாகவும், இப்னகமுவ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமாவார் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணியாளர்கள் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் ரஷாதி டிராவல்ஸ் பிரதிநிதி ஆகியோர் வைத்தியசாலைக்கு சென்று இறுதிசடங்குகளை பார்வையிட்டனர்.

 இதேவேளை இன்றைய தினம் (30) வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு ஜனாஸா மஸ்ஜிதுல் ஹராமுக்கு ஜனாஸா தொழுகைக்காக எடுத்துச் செல்லப்படும் என்றும், மக்காவில் ஜனாஸா அடக்கம் செய்யப்படும் என்றும் சவூதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!