கிளிநொச்சி உதயநகர் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது
#SriLanka
#Arrest
#Kilinochchi
#Lanka4
#இலங்கை
#கைது
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
கிளிநொச்சி உதயநகர் பகுதியில் நேற்று (28) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து முக்கியமாக துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் மோட்டார் சைக்கிளும் கணேசபுரம் பகுதியில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.