மட்டக்களப்பு ஓட்டமாவடியில் சிறப்பாக இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் நபி வழித்தொழுகை
#SriLanka
#Batticaloa
#Festival
#Muslim
#Lanka4
Kanimoli
2 years ago
மட்டக்களப்பு ஓட்டமாவடி, வாழைச்சேனை ,மீராவோடை, பிரதேசத்திற்கான பிரதான புனித ஹஜ் பெருநாள் நபி வழித்தொழுகை குபா பெறிய ஜும்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இன்று செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்றது.
ஹஜ் பெருநாள் தொழுகையினை தொடர்ந்து பெருநாள் சிறப்புரை இப்ராஹிம் நபியின் தியாகத்தை வலியுறுத்தும் வகையில் மெளலவி ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது சிறுவர்களும்,பெண்களும் ஆண்களும் ஆக பெருந்திரளானோர் தொழுகையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.ரீ.எம்.பாரிஸ்)


