மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது

#SriLanka #Arrest #GunShoot
Prathees
2 years ago
மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது

கடந்த 17ஆம் திகதி மினுவாங்கொடை, பொரகொடவத்தை ஒஸ்டின் சந்திக்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

 கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 சந்தேகநபர்கள் இருவரும் திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (28) இரவு பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

 அங்கு சந்தேகநபர்கள் வசம் இருந்த ஹெரோயின் போதைப் பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 37 வயதுடைய கொட்டுகுடா மற்றும் நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!