கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சி!

#Lanka4
Thamilini
2 years ago
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சி!

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சமூகத்தில் தவறான கருத்துக்களை பரப்ப எதிர்கட்சிகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.  

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்நாட்டு கடன் மற்றும் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  

இந்த செயல்முறை ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி என்பனவற்றிற்கு தீங்கு ஏற்பட மாட்டாது எனவும், தேவையற்ற விதத்தில் தவறான கருத்துகளை சமூகத்தில் பரப்புவது பொருத்தமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!