மட்டகளப்பில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

#Lanka4
Thamilini
2 years ago
மட்டகளப்பில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. 

28 வயதுடைய கொணாகொல்ல பகுதியைச் சேர்ந்த, இ.ஜி.சஜிந்தறங்கண என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

கொணாகொல்ல பகுதியிலிருந்து சின்னவத்தையில் தான் மேற்கொண்டிருந்த வேளாண்மைச் செய்கையை பார்வையிடுவதற்காக வந்துள்ள நிலையில் வயல் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!