புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது - பிரித்தானிய நீதிமன்றம்!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்தநாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படும் ஆபத்து உள்ளது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ருவாண்டா அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நல்லெண்ணத்துடன் வழங்கப்பட்டாலும், ருவாண்டா 'பாதுகாப்பான மூன்றாவது நாடு' அல்ல என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான பிற காரணங்களையும் நீதிபதிகள் ஒருமனதாக நிராகரித்துள்ளனர்.



