யாழ்ப்பாணத்தில் சிதறு தேங்காய் அடித்து வழிபட்ட மைத்திரிபால சிறிசேன!
#SriLanka
#Jaffna
#Maithripala Sirisena
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, அங்கு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ள அவர், இன்று முதல் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை நல்லூர் கந்தசுவாமி கோவிலில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அத்துடன், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை, இன்று காலை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்