வைத்தியசாலையின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 லட்சம் பெறுமதியான அறுவை சிகிச்சை உபகரணங்கள்
#SriLanka
#Colombo
#Hospital
Prathees
2 years ago
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவில்இ ஆடிட்டர் ஜெனரல் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
எனவே, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணரும் பணியை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கணக்குகள் குறித்த குழு கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.