விபத்தில் சிக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

#SriLanka #Police #Accident #Minister #Lanka4
Kanimoli
2 years ago
விபத்தில் சிக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்கலவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

 இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார். 

 குறித்த நால்வரும் பயணித்த சிற்றூந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

 காயமடைந்தவர்களில் விஜயகலா மகேஷ்வரன் தீவிரசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!